×

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 3 விமான நிலையங்கள் மூடல்

கீவ்: மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் எதிரொலியாக 3 முக்கிய விமான நிலையங்கள் நேற்று மூடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை தினசரி டிரோன் மூலமாக உக்ரைன் தாக்கி வருகின்றது. மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் தினசரி நடவடிக்கையாகியுள்ளது. நேற்றும் வழக்கம் போல் உக்ரைன் தனது டிரோன் தாக்குதலை தொடங்கியது.

இதன் எதிரொலியாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, மாஸ்கோவில் இருந்த 3 விமான நிலையங்கள் மூடப்பட்டது. இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோவின் இஸ்த்ரா மாவட்டத்தில் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்றார். டிரோனை ரஷ்ய விமான படை சுட்டு வீழ்த்தும் வீடியோவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. டிரோன் தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் எந்த பதிலையும் கூறவில்லை. இதேபோல் உக்ரைனின் குபியான்ஸ் அருகே ஓட்டலில் மீது ரஷ்யா ஷெல் தாக்குதலை நடத்தியது. இதில் பொதுமக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

The post மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 3 விமான நிலையங்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Moscow ,Kiev ,Russia… ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு